Developed by - Tamilosai
கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 13ஆம் திகதி காலை 6 மணி முதல் பிற்பகல் 8 மணி வரையிலான 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.