தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

0 436

போராட்டம் காரணமாக கண்டி – மஹியங்கனை பிரதான வீதி, திகன பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

எரிவாயு வழங்குமாறு கோரி பிரதேசவாசிகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்திப்பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக நேற்று இரவு அம்பாறை – கண்டி பிரதான வீதி உஹன பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

அத்துடன் நேற்று இரவு வரக்காபொல நகரில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது

Leave A Reply

Your email address will not be published.