Developed by - Tamilosai
அமெரிக்க பெண் எழுத்தாளரான 71 வயதான நான்சி கிராம்ப்படனின் கணவர் டானியல் ப்ரோபி 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியிடத்தில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இவரது, கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தும் போது, இவரது மனைவியின் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், எழுத்தாளர் அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு காரில் சென்று வந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் இவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்சி இ-பே இணையதளம் மூலம் துப்பாக்கி வாங்கி இந்த கொலையை செய்துள்ளார்.
இந்த எழுத்தாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி என கட்டுரை எழுதியுள்ளார்.இந்த தம்பதிக்கு பொருளாதார ரீதியான நெருக்கடி நீண்ட காலமாக இருந்ததாகவும், கணவர் உயிரிழந்தபின் கிடைத்த காப்பீட்டு தொகையை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் நான்சி குற்றவாளி என்பது உறுதியான நிலையில், இவருக்கு 25 ஆண்டு காலம் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்று அமெரிக்காவின் ஓரேகான் மாகாண நீதிமன்றம் இந்த பரபரப்பு கொலை வழக்கிற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது.