Developed by - Tamilosai
இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதனையடுத்து சந்தேக நபர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகளும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.