Developed by - Tamilosai
ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி கணக்காய்வாளர் இராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் இராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்களையும் வெளியிட்டுள்ளது. பாஸ்கரலிங்கம் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருப்பதாகக் பண்டோரா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியே இவ்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
