Developed by - Tamilosai
நேற்று பிற்பகல் லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அங்கரா விமானக் கட்டுப்பாடு UL 504 விமானத்தின் விமானியிடம் அவர்கள் பறந்து கொண்டிருந்த 33,000 அடியில் இருந்து 35,000 அடிக்கு பயணிக்குமாறு தெரிவிக்கப்படுள்ளது.ஆனால் UL விமானி மற்றும் பணியாளர்கள், ஏற்கனவே பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் ஒன்று 15 மைல் தொலைவில் 35,000 அடி உயரத்தில் பறந்ததை அவதானித்துள்ளனர்.
மேலே ஏற்கனவே ஒரு விமானம் பறப்பதாக அங்கராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவினக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விமானங்களை சரிபார்த்த அங்கரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு UL விமானியிடம் 35,000 அடி உயரத்தில் எந்த விமானத்தையும் தங்கள் ரேடாரில் கண்டறியவில்லை என தெரிவித்து UL விமானத்தை மேல் நோக்கி பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை விமானத்தின் ரேடாரில் கண்டறிந்த விமானி, மீண்டும் அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
UL விமானி அறிவிக்கப்பட்ட உயரத்திற்கு பறந்திருந்தால், பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதியிருக்கும்.
இந்த நிலையில் அவதானகமாக செயற்பட்ட UL விமானி கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
UL 504 விமானத்தில் இருந்த 275 பயணிகள் அதன் பணியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதன் பணியாளர்களின் உயிர்களை UL 504 விமானத்தின் தலைமை விமானியின் விழிப்புணர்வு மற்றும் வலுவான முடிவு காரணமாக காப்பாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.