Developed by - Tamilosai
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நெரிசலைக் குறைக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வரும்போது முதலில் பார்க்கும் இடம் என்பதால், அனைத்து வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான இடமாக விமான நிலையத்தை உருவாக்குவது முக்கியம் என அதிகாரிகளிடம் அமைச்சர் கூறியுள்ளார்.