தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்

0 435

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை பொருட்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த இலங்கைப் பயணி ஒருவரின் இரண்டு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 202 கற்றாழைச் செடிகள் மற்றும் 6 செல்ல மீன்களையே இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பறியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரதிப் பணிப்பாளர் சுதத் சில்வா தெரிவித்துள்ளார்.

செடிகள் மற்றும் மீன்களின் பெறுமதி 117,500 ரூபா எனவும், பொருட்களை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.