Developed by - Tamilosai
வவுனியா-ஈச்சங்குளம் சாலம்பன் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (01) காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.
வவுனியா கல்மடுவ பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த பெண் தமது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரித்து கொண்டிருந்த போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.
இதனால் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.