Developed by - Tamilosai
கட்சியில் உள்ள கள்வர்களை விரட்டினால், கட்சியைக் கட்டியெழுப்ப நான் தயார் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட போஷகர் பதவியில் நான் நீடிக்கின்றேன். என்னை எவரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பதவி விலகினால் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப நான் தயார் என அறிவித்துள்ளார் .