Developed by - Tamilosai
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காகவே இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஆளும் கட்சி குழுவின் விசேட கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.