தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

0 426

எரிபொருள் விலையேற்றம் காரணமாக வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கடலுணவு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகள் வவுனியாவிற்கு கொண்டு வரப்படுகின்றது.இதன் காரணமாக அங்கிருந்து கொண்டுவரப்படும் ஒரு கிலோகிராம் விளைமீன் 1000 ரூபாவாகவும், பாரை மீன் 1200 ரூபாவாகவும், முரல் மீன் 600 ரூபாவாகவும், சீலா மீன் 1000 ரூபாவாகவும், கணவாய் 1200 ரூபாவாகவும், சின்ன இறால் 1200 ரூபாவாகவும், பெரிய இறால் 1800 ரூபாவாகவும், நண்டு 1600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.

அதேவேளை கீரி மீன் 700 ரூபாவாகவும், சால மீன் 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.