தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடலட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர்கள் கைது

0 154

 மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதியின்றி இரவு நேரம் கடலட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர்கள் இன்றைய தினம் (28) காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) இரவு குறித்த 3 மீனவர்களும் படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று கடலட்டை பிடித்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 453 கடலட்டைகள், படகு இயந்திரம், கடலட்டை பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடி, சப்பாத்து என்பன மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று வியாழக்கிழமை காலை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

குறித்த 3 மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு அமைவாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் மூவரும்  பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 453 கடலட்டைகள் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டன.

கடலட்டை பிடிக்கும் தொழிலை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மட்டுமே மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடலட்டைகளின் உள்ளூர் சந்தை மதிப்பு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.