தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸை நியமித்ததில் சதியா? – மனோ கணேசன் சந்தேகம்

0 109

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்  இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

எங்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினை. அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள். யுத்தத்தை நாம் விரும்பவில்லை. யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு  தீர்வுகாண உள்ள தடையை அகற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கைக் கடல்வளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தைப் பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம்.

இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளஸை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளஸிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சினையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.