Developed by - Tamilosai
இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசக நிறுவனமான லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உடன்பாட்டை எட்டுவதே அதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தேவையான நிதி நிவாரணங்களை பெறுவதற்கு இந்த நாட்டில் கடன் மறுசீரமைப்பு அவசியம் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.