Developed by - Tamilosai
மலேசியாவில் வசிக்கும் பாரவூர்தி ஓட்டுனரான புலேந்திரன் பழனியப்பன் (51) என்ற இந்திய தமிழர் அனுமதியின்றி பாம்புகளை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 3,600 டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிக நீளமான பாம்பான இராச மலைப்பாம்புகள் (reticulated pythons) தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டவை. பல நாடுகளில், அதன் தோலுக்காகவும், கடத்தப்படுகின்றன.
குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் பழனியப்பன் ஓட்டிச் சென்ற கொண்டெய்னர் லொறியை சோதனை செய்து பாம்புகளை கைப்பற்றினர்.
ஓட்டுனர் இருக்கைக்கு மேலே உள்ள மேல்நிலைப் பெட்டியில் துணி மூடைகளில் பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், சிங்கப்பூரில் உள்ள அறியப்படாத பெறுநருக்கு பாம்புகளை கொடுத்து உதவ பழனியப்பன் ஒப்புக்கொண்டது தெரியவந்தது.
பழனியப்பனுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது கடத்தப்பட்ட ஒவ்வொரு பாம்பிற்கும் சிங்கப்பூர் பண மதிப்பில் $50,000 வரை அபராதம் கூட விதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.