Developed by - Tamilosai
இதுவரை உலக அளவில் உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் மட்டும் தான் கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளன.
ஆனால் தற்பொழுது கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் சட்ட அனுமதி வழங்கியுள்ள முதல் ஆசிய நாடாக தாய்லாந்து திகழ்கிறது.
வேளாண்மை மற்றும் சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தாய்லாந்து அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
2018ஆம் ஆண்டு மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து அனுமதி வழங்கியது. இனி கடைகளில் குளிர்பானங்கள், இனிப்புகள் மற்ற இதர பொருள்களில் கஞ்சாவை கலந்து விற்கவும் தாய்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் பொதுவெளியில் கஞ்சா புகைக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை என அறிவித்துள்ளது. மருத்துவ நலன்களை கருத்தில் கொண்டே கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறிய தாய்லாந்து அரசு, பொதுவெளியில் கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டால் மூன்று மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்தில் பாரம்பரியமாகவே உள்ளூர் வாசிகள் கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இந்த கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு வரும் என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.