Developed by - Tamilosai
தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகளைச் சமஷ்டிக்கான ஆணையாக மாற்றிய கஜேந்திரகுமாரின் சாணக்கிய உரை!“ நீங்கள் ஒரு கொடூரமான இனவழிப்பை எம்மீது இழைத்த பின்னரும் வடக்குக் கிழக்கில் எமது மக்கள் ஒன்று திரண்டு தமிழர்தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஷ்டித் தீர்வுக்காகவே பெருவாரியாக வாக்களித்திருந்தார்கள்…தெற்கில் நீங்கள் பெற்றதாகக் கூறுகின்ற 60% சிங்கள மக்கள் வழங்கிய ஆணையை விட வடக்குக் கிழக்கு மக்கள் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டிக்காக வழங்கிய ஆணை வீதாசாரத்தில் பெரிதானது, வலிமையானது…உங்களுடன் இருக்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட, தேர்தல் காலத்தில் மக்கள் முன் வாக்குக் கேட்டு வரும்போது தமிழர் தேசம் தலைநிமிர வாக்களியுங்கள் எனத் தமிழர் தேசத்திற்காகவே வாக்குக் கேட்டிருந்தார்கள்…அந்தவகையில் வடக்குக் கிழக்கில் எமது மக்கள் அளித்த வீதாசாரம் நீங்கள் பெற்ற 60 சதவீதத்தை விட வலிமையானது…ஏறத்தாழ 75 சதவீதத்துக்கும் மேலானது…அந்த ஆணை சமரசத்துக்கு உட்பட்டது அல்ல…மக்கள் அளித்த ஜனநாயக ஆணையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை!”