Developed by - Tamilosai
2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 118 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
உலகில் அதிகளவு கச்சா எண்ணெயை விநியோகிக்கும் நாடான ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மறுத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IAEA) கூட்டத்தை தொடர்ந்து அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள 30 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை உலக சந்தைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது.
இருப்பினும் ,இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.44 மணியளவில் பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 117 அமெரிக்க டொலர்களாகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 114 அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது.