Developed by - Tamilosai
இந்திய அரசு கச்சதீவினை தன்வசம் ஆக்குமா? இலங்கை அரசு கச்சதீவினை இந்தியாவுக்கு கொடுக்க தயார் ஆகிவிட்டதா? என்ற பல கேள்வி நம்முள் எழுகின்றது.
“கச்சதீவினை இலங்கை அரசாங்கம் கொடுக்கும் எனில், அதற்கு தமிழ் மக்களுடைய ஒப்புதல் குறித்து பேச வேண்டும். ஆகவே இதற்கான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்றும்,
இதனை பிரச்சினையாக மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
அண்ணாமலை கூறுகையில் எடுகோள்களை ஒரு பிரச்சினையாக எடுக்க வேண்டாம், அப்படியாக இருக்கட்டும். இது தொடர்பாக டெல்லி அரசாங்கம் எதுவும் பேசவில்லை. இந்த விடயமானது ஊடகங்களின் பேசுபொருளாக காணப்படுறதே தவிர, இரு அரசாங்கமும் இது குறித்து வாய் திறந்து பேசவில்லை என்பதே யதார்த்த உண்மையாகும்.
அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக தலைவர் என்பதை தவிர அவருக்கு அதிகாரம் இருப்பதாக நான் அறியவில்லை” என்றார்.