தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கச்சதீவு திருவிழாவில் அனுமதி இல்லையா?

0 408

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ் மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும் அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.