Developed by - Tamilosai
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதுமபிடிய குடுகல்பதனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மீதும்பிடிய குடுகல்பதனை பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த 5, 76 250 மில்லி லீற்றர் கோடாவும் 750 மில்லி லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.