Developed by - Tamilosai
ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 120 எம்.பி.க்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களது மனைவிகளுக்கு (விதவைகள்) ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகை சுமார் 15 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , மக்கள் விடுதலை முன்னணியின் 23 முன்னாள் எம்.பி.க்களும் ஓய்வூதியம் பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, எம்.பிக்களாக பதவி வகித்திருந்த ஐந்து தேரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.