Developed by - Tamilosai
அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொவிட் நெருக்கடி காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருக்கின்ற போதும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.