Developed by - Tamilosai
தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமை வகிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் இன்றைக்கு பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், அரசியல் தலைமைகள் இன்னும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக ஒரே பாதையில் பயணிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.