Developed by - Tamilosai
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டமையானது கடந்த வருடம் மொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன் நாட்டை சேர்ந்த ஏழு பேர் மற்றும் சிரியா நாட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். “இவர்கள் பல்வேறு கொடூரமான குற்றங்களை” புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அதில் பயங்கரவாதமும் அடங்கும் என அரசு ஊடகமான எஸ்பிஏ தெரிவித்துள்ளது.
இதில் சிலர் ஐஎஸ், அல் கொய்தா அல்லது ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மூன்று கட்ட நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் எஸ்பிஏ தெரிவித்துள்ளது.
இவர்கள் மீது முக்கிய பொருளாதார இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது, பாதுகாப்பு படையினரை கொன்றது, கடத்தல், பாலியல் வன்முறை மற்றும் நாட்டிற்குள் ஆயுதங்களை கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த வருடம் 69 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.