Developed by - Tamilosai
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த செயலணி தொடர்ந்தும் செயற்பட்டால் தன்னால் நீதி அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிப்பது குறித்து தன்னிடம் எவ்வித ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நியமனமானது அனைத்து இனங்களையும் உள்ளடக்கி நியாயமான வகையில் செயற்படத் தடையாக இருக்கும் என்பது நீதியமைச்சரின் நிலைப்பாடு எனக் கூறப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் சமய தலைவர்களான மௌலவிகள், அமைச்சரிடம் தமது கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதை அடுத்து, அமைச்சர் அலி சப்ரி தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.