தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி தலைவரை மகாநாயக்கர்கள் பரிந்துரைக்க வேண்டும் – பொன்சேகா

0 226

 ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு மகா நாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவரை நியமித்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், குறித்த செயலணிக்கு தலைமை தாங்கும் நபர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே இவ்வாறான நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் மகா நாயக்க தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த நியமனமானது தமது சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் என செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் இந்தக் கருத்து, அவர் எவ்வாறு செயலணியைக் கையாளப் போகிறார் என்பதையே காட்டுகிறது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்நாட்டில் உள்ள கண்டி சட்டம், தேசவழமை சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் போன்ற சட்டங்களை யாராலும் நீக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.