Developed by - Tamilosai
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை ஒரு வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த சிறுமியின் எதிர்வீட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரை நேற்று (09) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 16 வயது சிறுமியின் தாயார் சுகயீனம் காரணமாக படுத்த படுக்கையில் இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் சிறுமி 15 வயதாக இருக்கும் போது சிறுமியின் எதிர்வீட்டில் உள்ள இளைஞனை திருமணம் முடிப்பதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த இளைஞன் திருமண பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் இருந்து கடந்த ஒருவருடகாலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது சிறுமியை திருமணம் முடிக்க முடியாது என இளைஞன் மறப்பு தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர்.