Developed by - Tamilosai
இலங்கையில் இதுவரை 97 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 58 இலட்சத்து 47 ஆயிரத்து 891 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 36 இலட்சத்து 11 ஆயிரத்து 123 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.