Developed by - Tamilosai
மன்னார் – உப்புக்குளம் பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ 750 கிராம் நிறையுடைய வோட்டர் ஜெல் எனப்படும் வெடிப்பொருளை மன்னார் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த வெடிபொருள் தொகையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மீன்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்துவதற்காக இந்த வெடிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என மன்னார் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.