தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்த பட்சம் 240 ரூபா

0 416

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள- தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இலங்கையிலுள்ள தங்கள் குடும்பங்களுக்கு செலவு செய்ய அதிக பணம் அனுப்புவது வழக்கம்.
எவ்வாறாயினும், இலங்கையில் டொலர் நிலைமையின் தற்போதைய சூழலில், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோதமான வழிகள் மூலம் தமது பணத்தை இலங்கைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையால், நாட்டின் அந்நியக் கையிருப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்த பட்சம் 240 ரூபாவை செலுத்தினால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது பணத்தை உள்ளூர் வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, தற்போது ஒரு டொலருக்கு வழங்கப்படும் 10 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவை மேலும் 30 ரூபாவால் அதிகரிக்க அமைச்சர் அமைச்சரவைக்கு முன்மொழிவார் என தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
நிதியமைச்சானது அரச வங்கிகள் மற்றும் வர்த்தக வங்கிகளுடன் இணைந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும் வகையில் டொலர்களை அனுப்புவதற்கான முறையான வேலைத்திட்ட மொன்றை வகுத்துள்ளதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.
Leave A Reply

Your email address will not be published.