தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒமைக்ரோன் தொற்றுள்ள முதலாவது நபர் அடையாளம்!

0 252

 ஜப்பானுக்குள் ஒமைக்ரோன் மாறுபாடு பரவுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மாத காலத்திற்கு எல்லைகளை ஜப்பான் மூடியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரோன் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

நமீபியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற ஒருவருக்கே ஒமைக்ரோன் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும், முன்னதாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

குறித்த நோயாளியின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காணும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.