தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி – பைசர் நிறுவனம்

0 193

ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டன. இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பலன் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கிய அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கமைய ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.