தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒமிக்ரோன் தீவிர பரவல் ஒருநாளில் நூறுக்கு மேற்பட்டோர் இந்தியாவில் அடையாளம்!

0 69

உலகளவில் கோவிட்டின் மாறுபாடு பரவிவரும் நிலையில் இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 135 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களிலும், ஒமிக்ரோன் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் டெல்லியில் நேற்று மாத்திரம் 63 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகின்ற நிலையில், ஏற்கனவே செலுத்திக் கொண்ட கோவிட் தடுப்பூசியை தான் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.