தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து: டீசலுக்கு 35, பெற்றோலுக்கு 18 ரூபா இழப்பு

0 139

 3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

5 வருடத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில்  20 வருட காலத்திற்குள் மீண்டும் அக்கடனை செலுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என அவர் தெரிவித்தார்.

உலகளாவிய எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அமைச்சர் கூறினார்.

தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் டீசலுக்கு 35 ரூபாய் மற்றும் ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 18 ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.