Developed by - Tamilosai
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிக்கலின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.