தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் கொளுத்த வேண்டும் – மனோ சீற்றம்

0 240

விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசாங்கத்தையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து பொகவந்தலாவையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. 

அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசாங்கத்திற்கு  மட்டும் ஏன் தடுமாற்றம்?

தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 

மஞ்சளுக்குத் தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசி பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசாங்கம்  தோல்வி கண்டுள்ளது.

விவசாய அமைச்சரின் மட்டுமல்ல இராஜாங்க அமைச்சரின் கொடும்பாவியையும் எரிக்க வேண்டும் என்கின்றனர். 

இவ்விருவரின் மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசாங்கத்தையுமே கொளுத்தி, வீட்டுக்கு அனுப்பவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.