Developed by - Tamilosai
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், விவாதமும் இடம்பெறவுள்ளது. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.
ஆபிரிக்க வலயத்தில் 13 நாடுகள், ஆசிய பசுபிக் வலயத்தில் 13 நாடுகள், மேற்கு ஐரோப்பியாவில் 7 நாடுகள், கிழக்கு ஐரோப்பாவில் 8 நாடுகள் என மொத்தம் 47 நாடுகள் பேரவையில் அங்கம் வகிக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் அங்கத்துவம் வழங்கப்படும். மேற்படி நாடுகளுக்கு வாக்குரிமை உண்டு. ஏனைய நாடுகள் கண்காணிப்பாளர்களாக பங்கேற்கலாம்.