Developed by - Tamilosai
இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாத ஒழிப்புப் பிரினால் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய புலனாய்வுப் பிரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியை பரிசோதனை செய்த போது குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய அடிப்படைவாதியான சஹ்ரான் ஹாசீமின் புகைப்படங்கள், குரல் பதிவுகள் மற்றும் காணொலிகள் குறித்த தொலைபேசியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.