தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஐரோப்பிய வர்ணத்தில்ஒளிர்ந்த ஈபிள் கோபுரம்

0 165

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக்கொள்வதை ஒட்டி ஈபிள் கோபுரம் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், கட்டடங்கள் இன்றிரவு நீல வர்ணத்தில் பிரகாசித்தன.பாரிஸ் ஈபிள் கோபுரம் ஐரோப்பிய ஒன்றியக் கொடியின் நட்சத்திரங்கள் சகிதம் முழுவதும் நீல வர்ணத்தில் ஒளிர்வதை நகரமக்கள் கண்டுகளித்தனர்.எலிஸே அரண்மனை முற்றம், (la cour de l’Élysée) வெற்றி வளைவு (l’Arc de Triomphe,) பந்தியோன் ஆலயம் (le Panthéon) லூவர் அருங்காட்சியகம் (le Louvre) பாரிஸ் ஒபேரா (l’Opéra Garnier) திரு இருதயம் தேவாலயம் (le Sacré-Cœur) நொர்த்டாம் ஆலயம் (Notre-Dame) ஆகியனவும் ஐரோப்பிய வர்ணத்தில் ஒளிர்ந்தன. இன்றிரவும் நாளையும் எங்களது பலநகரங்களில் முக்கிய நினைவுச் சின்னங்கள் நீல நிறத்தில் ஒளியூட்டப்பட்டிருக்கும் என்று பிரான்ஸின் ஐரோப்பியவிவகார அமைச்சர் கிளிமொன்ட் பூன்(Clément Beaune) தெரிவித்தார்.ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கைமாறுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின்தலைமைப் பதவி ஜனவரி முதல் திகதிதொடக்கம் பிரான்ஸிடம் வருகிறது.இதேவேளை, ஈபிள் கோபுரம் மற்றும்வெற்றி வளைவுப் (l’Arc de Triomphe) பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தில் ஆண்டுதோறும் வருட இறுதி நாள் இரவில் இடம்பெறுகின்ற பிரமாண்டமான கண்கவர் வாணவேடிக்கை நிகழ்வு இம்முறை நடைபெறவில்லை. “ஒமெக்ரோன்” பிரான்ஸ் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் திரிபாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மக்கள் திரள்வதைக் கட்டுப்படுத்துகின்ற பணியில் சுமார் ஒரு லட்சம்பொலீஸாரும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.