தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஐந்து மாவட்டங்களுக்கு கொரோனா கொத்தணி – 🔴 எச்சரிக்கை

0 174

நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு கொரோனா கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் கொரோனா கொத்தணிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் வெளிப்படுத்தியிருந்தார்.

திருமண வைபவங்கள், மத வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் காரணமாகவும், மக்கள் கொரோனா சுகாதார வழிகாட்டல்களுக்கு புறம்பான வகையில் செயற்படுவதனாலும் இக் கொத்தணிகள் உருவாகியுள்ளன. 

இந்நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறினால் கொரோனா கொத்தணிகள் விரிவடைவதனை தவிர்க்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதனை முடிந்தளவு தவிர்த்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.