தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஏ- 9 வீதியில் வாகனங்கள் நிறுத்தத் தடை

0 136

வடக்கு மாகாணத்தில் ஏ- 9 பிரதான வீதியில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் ஏ- 9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தலை  விடுத்துள்ளார்.

இதன்படி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை அடையாளம் கண்டு இது தொடர்பில் அறிவிக்குமாறு சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற வாகன நிறுத்தத்திற்கு அனுமதி இல்லை.
பணி முடியும் வரை சாரதிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலகைகள் வைக்க வேண்டும்.

இப்பணியை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாணத்தில் 01.01.2021 முதல் 31/10/2021 வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் 128 கோர விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதில் 134 பேர் உயிரிழந்தனர். 23 பேர் பலத்த காயங்கள் மற்றும் 308 சிறிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர்.

இதேவேளை, வாகனம் செலுத்தும் முன் பொதுமக்கள் கவனமாக இருக்கவும், எப்போதும் ஆசன பட்டி அணியவும், பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், சரியான பாதை வேக வரம்புகளை உறுதி செய்யவும், வீதி விபத்துக்களை குறைக்கவும் அனைத்து சாரதிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.