தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஏழு மணி நேர நீர் விநியோகத்தடை

0 60

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளைய தினம்(4) கொழும்பின் பல பகுதிகளில் 7 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை(4) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(5) அதிகாலை 5 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகன, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பாகொட, விஜேராம முதல் ஹைலெவல் வீதியின் 7 ஆம் மைல் கல் வரையான பகுதி மற்றும் நுகேகொடை முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உள் வீதிகள் ஆகிய பகுதிகளில் குறித்த காலப்குதியில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.