Developed by - Tamilosai
இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய ஏழு பயிர்களுக்கான விதைகளின் இறக்குமதியை அடுத்த ஆண்டில் மட்டுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிழங்கு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிளகாய், உளுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை முதலான பயிர்களின் விதைகளை நாட்டில் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம், தற்போது சாதகமான பிரதிபலனை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.