Developed by - Tamilosai
மூன்று திறைசேரி உண்டியல்கள் அதாவது 93 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலம் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், 91 நாட்களில் காலாவதியாகும் 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் காலாவதியாகும் 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 364 நாட்களில் காலாவதியாகும் 28 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலம் விடப்படவுள்ளன.
எதிர்வரும் 22 ஆம் திகதி குறித்த ஏல விற்பனை நடவடிக்கை நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.