Developed by - Tamilosai
ஏமன், சடா நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி ஆதரவு பெற்ற ஏமன் ராணுவ படைகள் ஏவுகணைகளை வீசி கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 200 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்த தாக்குதல்கள் காரணமாக ஏமனில் இணைய சேவை முடங்கியுள்ளது.
அத்துடன், இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.