Developed by - Tamilosai
ஏமன் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய ட்ரக் வெடித்து சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் அந்த வாகனம் பெற்றோலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவத்தில் காயமடைந்த பலர் உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தற்காலிக முக்கிய கேந்திர நிலையமாக ஏடன் நகர் உள்ளது.
இந்நிலையில் ஈரானுடன் இணைந்த கௌதி குழுவிடமிருந்து பாதுகாக்க சவுதி அரேபியாவின் ஆதரவுடன் ஏமன் அரச படைகள் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.