Developed by - Tamilosai
எல்.என்.ஜி மின் நிலைய ஒப்பந்தம் நாட்டிற்கு நன்மை பயக்காவிடின் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
டீசல் நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகொன்றுக்கு 25 ரூபா செலவாகின்றது.
அதேபோல, எல்.என்.ஜியில் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகு ஒன்றுக்கு 18 ரூபாவிற்கு மேல் செலவாகும் பட்சத்தில் அதற்கு அனுமதி வழங்க முடியாது.
இது தொடர்பில் சகல தரப்பினரும் உரிய அவதானத்தைச் செலுத்த வேண்டும்.
எனவே, நன்மையற்ற நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கக் கூடாது எனவும் அதனை சர்வாதிகார போக்குடைய நிறுவனத்திற்குக் கையளிக்கக் கூடாது எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்