Developed by - Tamilosai
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் இந்தியக் கடற்படையினர் நாகபட்டினம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் வடமராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை மீனவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.